skip to main |
skip to sidebar
அபாரமானப் பலன்களைத் தந்த முன்னுதாரண விவசாய நடவடிக்கைகள்
விவசாயி, திரு. அருணாசலம் அவருடைய வாழை விளைச்சலில் பெற்ற அனுபவங்கள்
இயற்கை மற்றும் நீடித்த நிலைத்த விவசாயம் மிகக்குறைந்த செலவு, தயாரிப்பது எளிது, நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்புச் சக்தி கொண்டது. இவற்றைத் தவிர மிக முக்கியமான ஒன்று, இது மிக பாதுகாப்பானது என்பது கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு. அருணாசலம் அவர்களின் கருத்து.
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு திரு. அருணாசலமும் அவருடைய குடும்பத்தினரும் மூன்று ஏக்கரா நிலத்தை வாங்கினர். அது உப்பு நிலமாக இருந்ததால் அது ஒன்றுக்கும் பயனற்றது என்று கருதப்பட்டது. எனவே, அதன் விலையும் மிக மிகக் குறைவானதாகவே இருந்தது. இப்படிப்பட்ட மண்ணில் எந்தப் பயிரையும் விளைவிக்க முடியாது என்று அனைவரும் கூறினர்.
அபாரமானப் பலன்களைத் தந்த அனுபவ பூர்வ நடவடிக்கைகள்
- பல்வேறு வகை விதைகளை விதைத்தல்:
திரு அருணாசலம் தன் நிலத்தில் பலதரப்பட்ட விதைகளை முதலில் விதைத்தார். இம்முறையில், பல வகையான பயறு மற்றும் சிறு தானியங்களின் விதைகளை கலந்து விதைக்கபடுகிறது. விதைத்த ஒரு மாதத்திற்குப் பிறகு, வளர்ந்த பயிர்கள் மீண்டும் மண்ணிலேயே மடக்கி விடப்படுகிறது.
- நெற்பயிரில் கிடைத்த வருமானம்:
இவர் சில பாரம்பரிய நெல் வகைகளை இதே நிலத்தில் விதைத்து, அறுவடை செய்து விற்றதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து தொண்ணுறாயிரம் ரூபாயை சம்பாதித்தார்.
- வாழை விளைச்சலில் பெற்ற வருமானம்:
பின்னர் சுமார் 1800 வாழைக்கன்றுகளை இதே நிலத்தில் நட்டார். வாழைப்பழங்கள் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்பட்டன. இது தற்போது அதன் பதினொன்றாவது சுற்றில் உள்ளது. ஒவ்வொரு குலையும் சுமார் 100 ரூபாயிலிருந்து 190 ரூபாய் வரை விற்கப்பட்டன. இப்படி விற்றதில் கிடைத்த லாபம் சுமார் 1 80 000 ரூபாய்.
- வாழை மர கழிவுகளால் மூடாக்கு
ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்பும் கிடைக்கும் வாழை மர கழிவுகள், பூமியிலிருந்து ஒரு அடி உயரத்திற்கு மூடாக்கு போன்று குவிந்துள்ளது. களை எடுப்பது, விதைப்பது, உரமிடுதல் போன்ற செலவு என்று எதுவுமே கிடையாது. தானாகவே நிலத்தில் சத்துக்கள் மேளாண்மை நடப்பதால், வெறும் அறுவடை மட்டுமே செய்தால் போதுமானது என்று திரு அருணாசலம் கூறுகிறார்.
வெண்டை, கத்தரி, மிளகாய், சுரைக்காய், பூசணிக்காய், பப்பாளி, பச்சைப் பயிறு, காராமணி போன்ற தாவர வகைகளை வாழை மரங்களிடையே ஊடு பயிர்களாக வளர்த்து அந்த வகையில் அவர் ஈட்டிய வருமானம் சுமார் 10,000 ரூபாய்.
- வேலி மற்றும் வரப்பு பயிர்கள்:
மரம் மற்றும் தீவனப்பயிர்கள் வேலி மற்றும் வரப்புப் பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.
ஒரு வயதே ஆன, இரண்டு காங்கேயம் காளைகள் ரூபாய் 8,500 வீதம் வாங்கப்பட்டன. ஆறு மாதங்களுக்குள் அவை 50,000 ரூபாய்க்கு அருகிலுள்ள வருடாந்திர மாட்டு சந்தையில் விற்கபபட்டன. இரண்டும் விற்கப்பட்ட சமயத்தில் அவை இரண்டுமே பாரம் சுமப்பதில் நல்ல பயிற்சி பெற்றவையாக விளங்கின. காளைகள் மற்றும் தலைச்சேரி ஆடுகளின் சாணம் நீரில் கரைக்கப்பட்டு வயல்களில் நீர்ப்பாசனத்திற்காக உபயோகிக்கப்பட்டது. இது மண்ணுக்கு அருமையான உரமாக செயல்படுகிறது. ஆடுகளின் விற்பனை மூலம் கூடுதல் வருமானமாக ரூபாய் 60,000 கிடைத்தது. அவருடைய 10 சேவல்களுக்கு பப்பாளிப் பழங்கள் மற்றும் விதைகள் உணவாகப் பயன்பட்டன. இந்த சேவல்கள் சண்டைக்கோழிகளாகப் பயிற்சி அளிக்கப்பட்டு ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டன. இந்தப் சேவல்களை விற்பதன் மூலம் அவருக்கு ஒரு வருடத்திற்ககு பத்தாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்தப் பாரம்பரிய இரக விலங்குகள் (அவை மாடுகளோ ஆடுகளோ அல்லது கோழிகளோ) நோய்வாய் படுவதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், அவற்றை விற்பதற்காக வளர்ப்பதும் எளிது.
" 365 நாட்களில் பெரிதாக செலவு எதுவும் செய்யாமல், முதலீடு செய்யாமல் என்னுடையஇந்த மூன்று ஏக்கரா நிலத்தில் என்னால் ஆறு லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடிகிறது என்றால் மற்றவர்களால் ஏன்முடியாது?" என்று திரு அருணாசம் கேட்கிறார்.
மேலும்தகவல்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
திரு அருணாசம், குலவைகாரடு
பி. வெள்ளாளபாளையம் (தபால்)
கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு,
தபால் பெட்டி எண்: 638476,
கைபேசி எண்: 944336323
இ-மெயில் : elunkathir@gmail.com,
ஆதாரம் : தி இந்து, ஜனவரி 1, 2009
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக