வியாழன், 8 ஏப்ரல், 2010

இயற்கை வேளாண் நெல் சாகுபடியில் பாளை. விவசாயி சாதனை

இயற்கை வேளாண் முறையில் நெல் சாகுபடி செய்த பாளையங்கோட்டை விவசாயிக்கு ஹெக்டேருக்கு 11,215 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி கர்னல் தேவதாஸ். இவர் பாறைக்குளம் வருவாய் கிராமத்தில் சுமார் 13 ஏக்கர் பரப்பில் 3 ஆண்டுகளாக அங்கக வேளாண் முறையில் நெல் சாகுபடி செய்து நல்ல மகசூல் பெற்று வருகிறார். இவர் தனது வயலில் பசுமாட்டு சாணம், கோமியம் மற்றும் இயற்கை இடுபொருள் கொண்ட கலவைகளை உரமாக இட்டு வந்ததால் நெற்பயிரில் எவ்வித பூச்சி நோய் தாக்குதல் இன்றி வளமையான பயிராகவும் கதிர்கள் திரட்சியாகவும் அதிக மணிகள் கொண்டதாகவும் இருந்தது. இந்த விவசாயி இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்த கிச்சடி சம்பா என்ற நெல் ரகம் மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அறுவடை செய்யப்பட்டது. இந்த நெல் ரகத்தில் ஹெக்டேருக்கு 11,215 கிலோ மகசூல் கிடைத்தது. இதுபோன்று நெல்லை மாவட்ட விவசாயிகள் அனைவரும் அங்கக வேளாண் முறையினைக் கடைபிடித்து மண்வளத்தை பெருக்கி இடுபொருள்களின் செலவைக் குறைத்து அதிக லாபம் ஈட்ட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக