சனி, 10 ஏப்ரல், 2010

மீன்குண்பம்

பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை மீன்கள்.

மண்ணில் தழைச்சத்தைப் பெருக்க, அதாவது நைட்ரஜன் சத்தைப் பெருக்க - கண்ட கண்ட உரங்களைக் கொட்டுவதற்குப் பதிலாக பசுந்தாள் உரங்களை நிறைய பயன்படுத்தலாம் என்கிறார்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள். உழவு முடிந்து பயிர்கள் வளர ஆரம்பித்தபிறகு தழைச்சத்து கூட்ட வேண்டுமெனில் மீன் குண்பத்தை தாராளாமாகப் பயிர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த மீன் குண்பத்தைத் தயார் செய்வது மிகவும் சுலபம். குளத்து மீன், ஏரி மீன், கிணற்று மீன் இதில் ஏதாவது ஒரு வகை மீனை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு தூளாக்கிய நாட்டு வெல்லத்தை கலந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துவிடுங்கள். இப்படி 20 முதல் 22 நாட்கள் மூடி வைக்க வேண்டும்.

பிறகு திறந்து பார்த்தால் கெட்டியான சாறு வடிகட்டி நிற்கும். இதில் ஒரு மில்லி சாறை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பயிருக்குப் பாய்ச்சினால் நல்ல பலன் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக